Tuesday, December 19, 2006

صفة الحج والعمرةhaj-umra guidance

சமர்ப்பணம்
இப்புத்தகத்தினை கடந்த
1425.12.03 க்குச் சரியாக
2005.01.13 ம் திகதி இவ்வுலக வாழ்க்கையினை முடித்துக் கொண்டு மறு உலக வாழ்க்கையினை அடைந்து கொண்ட எனதருமைத் தந்தை அவர்களின் செய லேட்டில் மறுமை வரை ஸதக்கத்துல் ஜாரியா எனும் நிலையான நன்மை பதியப்பட வேண்டும் எனும் நோக்கில் அவருக்கு ஸதக்காவாக சமர்ப்பிக்கின்றேன்.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் எனது இச்சிறிய பணியினை அங்கீகரித்து உலகுள்ளவரை எனது தந்தையவர்களின் செயலேட்டில் நன்மைகள் பதியப்பட்டுக் கொண்டே இருக்கச் செய்வானாக. இன்னும் அவரின் அணைத்து பாவங்களையும் மன்னித்து அவனது அளவற்ற கருணையைக் கொண்டு அன்னாரை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக.
ஆமீன்
இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன். ஜே.பி

நன்றி உரை

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ سورة إبراهيم:7
நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; என்று உங்களுக்கு இறை வன் அறிக்கை இட்டதை (நினைவு கூறுங்கள்

அல்குர்ஆன்

عن أبي هريرة رضي الله عنه
عن النبي صلى الله عليه وسلم قال:
لا يشكر الله من لا يشكر الناس
( سنن أبي داود ج4:ص255- 4811
)
மனிதர்களுக்கு நன்றி செலுத்தா தவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த மாட்டான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா رضي الله عنه
நூல்:அபூ தாவூத்
அளவற்ற அருளாளனும,; நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருற்பெயர் கொண்டு ஆரம்பிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன், அவன் எனக்குச் செய்திருக்கும் அளப்பெரிய அருட்கொடைகளுக்காக அவனுக்கு முதலில் நான் நன்றி செலுத்துகின்றேன். அடுத்ததாக அகிலத்திற்கு அருளாக அனுப்பப்பட்ட அருமைத் தூதர் முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் மீது அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றென்றும் நிலவட்டும் என பிராத்தித்தவனாக,

இவ்வுலகில் என்னை பெற்று அமுதூட்டி வளர்த்த எனதருமை அன்னைக் கும், அறிவூட்டி வளர்த்த எனதருமை தந்தைக்கும் எனது பணிவான நன்றிகள் உரித்தாகும்.
அத்துடன் எல்லாம் வல்ல அல்லாஹ் எனதன்பு தந்தை அவர்களின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து அவனது அளவற்ற கருணையைக் கொண்டு அவரை அவனது உயர் சுவர்க்கத்தில் குடியமர்த்துவானாக. இன்னும் எனதன்புத் தாயின் வாழ்நாளை நீடிக்கச் செய்து அதிகமான நல்லமற்களைச் செய்யும் நல் வாய்ப்புக்களை அவருக்கு வழங்கி நாம் அனைவர்களும் உயர் சுவர்க்கத்தில் ஒன்று சேர அருள் செய்வானாக.
தொடர்ந்தும் எனது நன்றிகள் எனது ஆரம்ப பாலர் பாடம் முதல் இன்று வரை யாரெல்லாம் எனது ஆசானாகவிருந்து அச்சர மும் அறிவும் கற்றுக் கொடுத்தார்களோ அவர் கள் அனைவர்களுக்கும்; உரித்தாகும்.
அடுத்தாக எனது இன்றைய இவ்வுயர் நிலைக்கு வழியமைத்து எனது கல்வி கண்களைத் திறந்து எனது கல்வியிற்கு அஸ்திவாரம் இட்டுத் தந்த வள்ளல்களான பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அக்குரணை ஆறாம் கட்டையைச் சேர்ந்த பெருந்தகைகளான
m.i.m அஸ்ஹர், மற்றும் அவரன்புச் சகோதரர் அல்ஹாஜ் m.i.m ஸியாத் ஆகியோர்களுக்கும் எனது பணிவான நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் கள் எனக்கு செய்த நன்மையிற்கு நிச்சயமாக என்னால் கைமாறு செய்து விட முடியாது ஆகவே அவர்களுக்குரிய கை மாற்றினை வல்ல அல்லாஹ் நிறைவாக வழங்குவான் என அல்லாஹ்வின் மீதே ஆதரவு வைக்கின்றேன். அத்துடன் அவர்கள் இருவருடைய குடுப்பத் தினர்கள் அனைவர்களும் என்றும் எனது நன்றியிற்கு உரியவர்களே. அவர்கள் அனைவர் களுக்கும் நான் உயிருள்ள வரை கடமைப் பாடுடையவனே. எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய வாழ்க்கையிலும், செல்வத்திலும் பரகத் செய்வானாக. அவர் களையும,; அவர்களது பெற்றார்கள், மற்றும் மனைவி மக்கள் அனைவர்களையும் உயர் சுவர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக.
அடுத்ததாக இச்சிறு நூலை வெளியிட எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த ஹிஜ்ரி
1426 க்குச் சரியாக
2006 ம் ஆண்டு எனது வழிகாட்டலின் கீழ் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிய இந்திய தமிழ் நாடு, மற்றும் இலங்கையைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும் எனது நன்றியிற்கு உரியவர்களே. இன்னும் எனக்கு இப்புத்தகத் தினை எழுதும் வாய்ப்பளித்து அதனைப் பிரசுரித்து வெளிட்ட அல்கஸீம் வெளிநாட்ட வர்களுக்கான வழிகாட்டல் நிலையத்தின் தலைமையகத்திற்கும் எனது நிறைவான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அல்லாஹ் நம் அனைவர்களையும் நன்றியுள்ள நல்லடியார்களில் ஆக்கியருள்வானாக.

இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்-jP
புரைதா – அல்கஸிம்,

صفـة الحـج والعمـرة
ஹஜ் உம்ரா செய்யும் முறை


الحمد لله والصلاة والسلام على رسول لله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருற்பெயரால் ...

ஹஜ் என்பது இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளுள் ஐந்தாவது முக்கிய கடமை யாகும.; புனித மக்கா சென்று வர உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சக்தி இருந்தால் அவர் மீது புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாத கடமை யாகும். இது வாழ் நாளில் ஒரு முறைதான் கடமையாகும் அதன்பிறகு வசதி உள்ளவர்கள் அதிகமதிகம் செய்வதில் தவறு கிடையாது.
அவ்வாறே உம்ரா செய்வதும் புனித மக்கா சென்று வர உடல் ரீதியாகவும் பொரு ளாதார ரீதியாகவும் சக்தி இருந்தால் அவர் மீது வாழ் நாளில் ஒரு முறை உம்றா செய்வது கடமையாகும். இது பற்றி வல்ல அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.

وَأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ سورة البقرة 196
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ் வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.
முதலில் உம்ரா செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

உம்ரா செய்பவர் மீக்காத்தில் கடமை யான குளிப்பிற்குப் போன்று குளித்துக் கொள் வது சுன்னதாகும். முடியாவிட்டால் வுழு செய்து கொள்வது போதுமானதாகும். அத்து டன் அத்தர் போன்ற நறுமணங்களையும் ஆடையில் படாதவாறு தலை மற்றும் தாடிகளுக்குப் பூசிக்கொள்ளலாம். இஹ்ராம் செய்ததன் பிறகு பூசக் கூடாது.
மீக்காத்தில் அல்லது அதற்கு முன் தனது உடலில் மர்மஸ்தானம், மற்றும் அக்குள் போன்றவற்றில் உள்ள உரோமங்களை அகற் றிக் கொள்ளல் சிறந்ததாகும்.
இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா செய்யச் செல்லும் ஒருவர் அந்த வணக்கத்திற்க்கு நிய்யத் வைத்து குறிப்பிட்ட அந்த வணக்கத்திற்குள் நுழை தலாகும் மீக்காத் என்பது எல்லையாகும் அதாவது ஹஜ் அல்லது உம்ரா செய்யச் செல்லும் ஒருவர் இஹ்ராம் செய்கின்ற இடத்திற்கு மீக்காத் என்று சொல்லப்படும் இவ்வாறான இடங்கள் ஐந்து உண்டு.
1-thulhulayfa
2-aljahfa
3-yalamlam
4-thathu irq
5-karnal manazil

இவைகள்தாம் இஹ்ராம் செய்வதற்குரிய எல்லைகளாகும் இவைகளில் ஒன்றன் ஊடாக செல்பவர் அந்த இடத்தில் குளித்து அல்லது வுழு செய்து கொண்டதன் பிறகு பின் வருமாறு வாயால் மொழிதல் வேண்டும்

أَللّهُمِّ لَبَّيْكَ عُمْرَةً
அல்லாஹும்ம லbப்பைக்க உம்ரதன்

பொருள்:-
யா அல்லாஹ், இதோ! உம்ராவுக்காக உன்னிடம் ஆஜராகி விட்டேன்

ஆகாயமார்க்கமாகச் செல்பவர்கள் தாம் விமானத்தில் ஏறுவதற்கு முன் மீக்காத்தில் செய்ய வேண்டியவைகளைச் செய்து கொள்ள வேண்டும் நிய்யத்தை மட்டும் மீக்காத்தைக் கடக்கும் போது செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பட்ட அந்த வணக்கத்திற்கு நிய்யத் வைத்து அந்த வணக்கத்திற்குள் பிர வேசிப்பதற்கு முன் தான் அணிந்திருக்கும் தைக் கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் களை ந்து இங்கு உள்ள படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு தைக்கப்படாத ஒரு வெண்ணிற வேஷ்டியும், ஒரு வெண்ணிற மேலாடையும் ஒரு காலணியும் மாத்திரம் அணிந்து கொள்ள வேண்டும். கை கடிகாரம், பெல்ட் போன்றவைகள் அணிவது தடை கிடையாது
இது ஆண்களுக்கு மாத்திரமே பெண் கள் தங்கள் அலங்காரத்தைக் வெளிக் காட்டாத வகையில் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
அத்துடன்; மீக்காத்திலிருந்து கஃபா வை அடையும் வரை பின்வரும் தல்பியாவை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே செல்லல் வேண்டும்.


لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْد وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ.

லப்bபைக் அல்லாஹும்ம லப்bபைக், லப்bபைக் லா ஷரீக்க லக்க லப்bபைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க், லா ஷரீக்க லக்.
பொருள்:- இதோ உன்னிடம் ஆஜராகி விட்டேன். அல்லாஹ்வே! இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது, இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருற்களும், ஆட்;சியும் உனக்கே சொந்தம், உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது.


பிறகு கஃபாவில் நுழையும்போது பின் வரும் துவாவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْل الِلّهِ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

bபிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி ரபடீபிஃபிர்லீ துனூபீ வப்தஹ் லீ அப் bவாbப ரஹ்மதிக்க
இந்த துஆ அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவானதே.

தவாப் طواف

தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை சுத்தி வலம் வருதலாகும்.
தவாஃபை ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பட்ட மூலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். முடியுமாயின் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும.; முடியா விட்டால் கையால் அல்லது கைத்தடியால் தொட்டு கையை அல்லது கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம். அதுவும் முடியா விட்டால் அதை நோக்கி கையால் சைகை செய்து கொண்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும்.
ஹஜருல் அஸ்வத் என்பது கஃபாவின் கதவுடன் ஒட்டினாற்போல் உள்ள மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கறுப்பு கல்லாகும்.

ஹஜருல் அஸ்வதிற்கு நேர் எதிரே பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் பச்சை மின் விழக்கி (லைட்டி) ற்கு நேரே எந்த இடத்தில் நின்று கொண்டு கஃபாவை நோக்கி கையால் சைகை செய்தாலும் போதுமானதாகும். அவ்வாறு பள்ளியின் அனைத்து மேல் மாடி களிலும் தவாப் செய்யலாம். அப்படி ஹஜருல் அஸ்வதை அல்லது அதைத் தொட்ட கைத் தடியை அல்லது கையை முத்தமிடும் போது அல்லது அதன் பக்கம் கையால் சைகை செய்யும் போது

بِسْمِ اللهِ اَللهُ اَكْبَرْ

bபிஸ்மில்லாஹி, அல்லாஹுஅக்பbர்
என்று சொல்ல வேண்டும்.

குறிப்பு:-சைகை காட்டிய கையை முத்தமிடக் கூடாது.
தவாஃப் சுற்றி வரும்போது ருக்குனுல் யமானி எனும் மூலைக்கும் ஹஜருல் அஸ்வ திற்கும் இடையில்


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

என்று ஓதுதல் சுன்னததாகும்

ருக்குனுல் யமானி என்பது ஒரு மனிதன் ஹஜருல் அஸ்வதை முன்னோக்கி நிற்கும் போது அவனது இடது புறத்தில் உள்ள கஃபாவின் மூலையாகும் முன்பக்கத்தில் உள்ள படத்தில் பார்க்கவும்.

 இப்படியாக கஃபாவை ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
 அதில் முதல் மூன்று சுற்றுக்களிலும் முடியுமாயின் வேகத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதைத்
தாண்டிச் செல்லும் போதெல்லாம் அதன் பக்கம் கையைக் காட்டி அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிஸ்மில்லாஹ் என்று சொல்லக் கூடாது.

அத்துடன் தவாஃபின் அனைத்து சுற்றுக்களின் போதும் தமக்குத் தேவை யான துஆக்களை தமக்குத் தெரிந்த மொழியில் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு தவாப் செய்யும் போது இங்கே படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண் டும்.

தவாஃப் செய்து முடிந்தவுடன் மகாமு இப்றாஹீமுக்கு அருகில் சென்று இரண்டு ரகஆத்துக்கள் சுன்னத் தொழ வேண்டும் அங்கு இடம் கிடைக்கா விட்டால் பள்ளியில் எந்த இடத்திலேனும் தொழுது கொள்ளலாம். இத்தொழுகையில் முதலாம் 'ரகஅத்தில்' சூரத்துல் பாத்திஹாவிற்குப் பிறகு ''குல் யா அய்யுஹல் காபிரூன்'' எனும் 'சூராவையும,; இரண்டாவது 'ரகஅத்தில'; 'சூரத்துல் பாத்திஹா'விற்குப் பிறகு 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் சூராவையும் ஓத வேண்டும் தெரியாதவர்கள் தமக்குத் தெரிந்த ஏதாகிலும் சூராக்களை ஓதிக்கொள்ளலாம். தொழும் போது மேலாடையால் தோள் புஜத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

மகாமு இப்றாஹீம் என்பது நபி இப்ராகிம் عليه السلام அவர்கள் கஃபாவைக் கட்டியபோது ஏறி நின்ற ஒரு கல்லாகும் இது கஃபாவின் கதவுக்கு நேரே சற்று வலது புறமாக கண்ணாடி பெட்டியில் வைக்கப் பட்டுள்ளது.
பிறகு ஜம்ஜம் தண்ணீரை வயிறு நிறைய குடிக்க வேண்டும். பள்ளியின் அனைத்து பக்கங்களிலும் வைக்கப் பட்டிருக்கும் அனைத்து தண்ணீர்களும் ஜம்ஜம் தண்ணீ ரேயாகும். தமக்கு வசதியான எந்த இடத்திலும் குடித்துக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஸயீ செய்ய வேண்டும்.

ஸயீ –السعي

ஸயீ என்பது கஃபாவிற்கு எதிரே அமைந் துள்ள ஸஃபா மர்வா ஆகிய இரு மலைகளுக் கிடையில் தொங்கோட்டம் ஓடுதலாகும்.

இத்தொங்கோட்டம் ஏழுமுறைகள் ஓட வேண்டும்.
ஸயீ செய்யும் முறை
ஸஃபா குன்றின் மீது கஃபா தெரியும் வரை ஏறி கிப்லாவை முன்நோக்கி நின்று கொண்டு கஃபாவை நோக்கி கையால் சைகைக் காட்டிக் கொண்டுإِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதனைத் தொடர்ந்து பின் வரும் தஹ்லீலை ஓத வேண்டும்

اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ اَللهْ اَكْبَرْ لَا إِلهَ إِلَّا اللهُ وَالله ُاَكْبَرْ لَا إِلهَ إِلَّا الله ُوَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتْ وَهُوَ عَلََى كُلِّ شَيْءٍ قَدِيْرْ لَا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَهَزَمَ الْأحْزَابَ وَحْدَهْ.
(3 مرات)

அல்லாஹு அக்பbர், அல்லாஹு அக்பbர், அல்லாஹு அக்பbர், லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பbர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத் வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் லா இலாஹ இல்லால்லாஹு வஹ்தஹ,; அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்bதஹ், வஹஸமல் அஹ்ஸாபb வஹ்தஹ்,

இவ்வாறு (மூன்று தடவைகள்) ஓத வேண்டும் ஒவ்வொரு முறையும் இதனை ஓதிய பிறகு இம்மை மறுமை தொடர்பான தன் தேவைகள் அனைத்தையும் தமக்குத் தெரிந்த பாஷையால் கேட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.
ஸஃபாவில் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்து விட்டு அங்கிருந்து மர்வாவிற்குச் செல்ல வேண்டும் மர்வா குன்றில் ஏறி நின்று கொண்டு, ஸஃபாவில் செய்தது போன்று செய்ய வேண்டும். ஆனால் இங்கு ஸஃபா மலையில் ஓதிய குர்ஆன் வசனத்தை ஓதக்கூடாது. இவ்வாறு ஒரு தடவை செய்ததுடன் ஸயி உடைய ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடிந்து விடுகிறது.

இவ்வாறு ஸயீ செய்யும் போது ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் உள்ள பச்சை விளக்கு (லைட்) இரண்டிற்கும் இடையில் ஆண்கள் சற்று வேகமாக ஓடிச் செல்லல் வேண்டும். இப்படியாக ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கு செல்வது ஒரு சுற்று என்றும் மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு செல்வது ஒரு சுற்று என்றும் கணக்கெடுக்கப்படும். அதன்படி ஸயீ ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவ டையும்.
அதன் பிறகு தலை முடியை மொட்டையடிக்க வேண்டும் அல்லது அனைத்து முடிகளையும் கட்டையாக வெட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் உம்ரா நிறைவு பெறுகின்றது. இஹ்ராமின் போது தடுக்கப்பட்டிருந்த அனைத்திற்கும் தடை நீங்கிவிடும்
ஹஜ்ஜின் வகைகள்
ஹஜ் மூன்று வகைப்படும்
1. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع
2. ஹஜ் ஜுல் கிரான் حج القران
3. ஹஜ் ஜுல் இப்ராத் حج الافراد

ஹஜ் தமத்துஉ حج التمتع
இது ஒரே வருடத்தில் ஒரே பயணத்தில் உம்ரா ஹஜ் ஆகிய இரு வணக்கங்களையும் வௌ;வேறாகப் பிரித்து முன்னர் விபரிக்கப் பட்ட பிரகாரம் முதலில் உம்ராவை முடித்து இஹ்ராமை களைந்து விட்டு மீண்டும் துல்ஹஜ் பிறை 8 ம் நாள் ளுஹருக்கு முன்னதாக அல்லது 9ம் நாள் முடிவதற்குள்ளாக தாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் நிய்யத் செய்வ தாகும். இவர்

மீகாத்தில்
أَللّهُمِّ لَبَّيْكَ عُمْرَةً

அல்லாஹும்ம லbப்பைக உம்ரதன்
பொருள்: யா அல்லாஹ், இதோ! உம்ரா வுக்காக ஆஜராகி விட்டேன் என்று கூறுவார்.

இவர் உம்ராவை முடித்து விட்டு மீண்டும் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் செய்து கொள்ளும் வரை இஹ்ராமை களைந்து கொள்ள முடியம். இவருக்கு இஹ்ராமின் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கி விடும்.

ஹஜ் கிரான்
இது உம்ராவையும், ஹஜ்ஜையும் ஒன்றாக சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்வதாகும். இவர் மீகாத்தில்,

أللهم لبيك عمرة وحجا
அல்லாஹும்ம லbப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று சொல்ல வேண்டும்.
பொருள்:-
யா அல்லாஹ், இதோ! உம்ரா வுக்காகவும் ஹஜ்ஜிக்காகவும் ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார்.

இவ்வாறு ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து செய்வதாக நிய்யத் செய்தவர் உம்ராவுக்குரிய ஸயீயை முடித்து விட்டு துல்ஹஜ் ஆம் நாள் தலைமுடியை மழிக்கும்வரை அல்லது குறைத்துக் கத்தரிக்கும் வரை இஹ்ராமுடனேயே இருக்க வேண்டும்.

ஹஜ் இப்ராத்
இது ஹஜ் மட்டும்; செய்தலாகும். இவர் மீக்காத்தில்
أللهم لبيك حجا
அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன்
என்று சொல்ல வேண்டும்.
பொருள்:-
யா அல்லாஹ், இதோ! ஹஜ்ஜிக்காக ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார்.

இவ்வாறு ஹஜ் மட்டும் செய்வதற்கு நிய்யத் வைத்துக் கொண்டவர் தவாஃபுல் குதூம் (மக்காவில் நுழைந்தவுடன் செய்யும் தவாஃப்) மட்டும் செய்து விட்டு துல்ஹஜ்
10ஆம் நாள் தலைமுடியை மழிக்கும் வரையில் இஹ்ராம் உடனேயே இருக்க வேண்டும்.
இவர் மீக்காத்தில் இருந்து மக்கா வுக்குள் நுழையாது நேரே மினாவுக்குச் செல்பவராக இருந்தால் அவர் தவாஃபுல் குதூம் செய்ய மாட்டார்.

மேலே விவரிக்கப்பட்ட அனைவரும் அவர வருக்குரிய வணக்கத்திற்கு நிய்யத் வைத்து வணக்கத்தில் பிரவேசித்து விட்டார்களாயின் மீக்காத்திலிருந்து பெருநாளன்று ஜம்ரதுல் அகபாவில் கல் எறியும் வரை பின் வரும் தல்பியாவை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْد وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ.
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க், லா ஷரீக்க லக்.

அடுத்து ஹஜ்ஜிக்குரிய கிரியைகள்
துல் ஹஜ் பிறை
8 ஆம்; நாளிலிருந்து ஆரம்பமாகும்.

8 ஆம் நாள் செய்ய வேண்டியவை

ஹஜ் தமத்துவு செய்பவர் தாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் தரித்து நிய்யத் செய்து கொள்ள வேண்டும். ஹஜ் கிரான் அல்லது ஹஜ் இப்ராத் செய்பவர்கள் முன்னர் செய்து கொண்ட இஹ்ராமுடனேயே இருப்பார்கள்.
அடுத்ததாக அன்றய தினம் அனைத்து ஹாஜிகளும் மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு சென்று ழுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளை அங்கு தொழ வேண்டும். அவற்றில் நான்கு ரகஅத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும்.

மினா என்பது மக்காவிலிருந்து சுமார்
7 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு புனித இடமாகும்.


இவ்வாறு துல் ஹஜ் பிறை
8 ம் நாள் மினாவில் தங்குவது சுன்னத்தாகும்
9 ஆம் நாள் செய்ய வேண்டியவை

மினாவிலிருந்து ஸுப்ஹுக்குப் பின்பு சூரியன் உதித்த பிறகு தல்பியா கூறிய வண்ணம் அரபாவை நோக்கிச் செல்ல வேண்டும் அங்கு சென்று அங்கு ழுஹர், அஸர் ஆகிய இரண்டு தொழுகைகளையும் ளுஹ ருடைய நேரத்தில் சேர்த்து சுருக்கி ஜம்உ கஸ்ராகத் தொழ வேண்டும்.
அடுத்து சூரியன் நன்கு மறையும் வரை அங்கு தங்கியிருந்து திக்ர் துஆ போன்ற வற்றில் ஈடுபடல் வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் அரபாவிலிருந்து முஸ்தலிஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். அங்கு சென்று மஃரிப், இஷா ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்தும், இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கியும் தொழ வேண்டும். அன்று இரவு முஸ்தலிபாவில் தங்க வேண்டும்.
அரபா என்பது மக்காவிலிருந்து மினா வழியாக சுமார்
20 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு மாபெரும் மைதானமாகும் இது ஒரு புனித ஸ்தலமாகும் இங்குதான் நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜின் இறுதிப் பேருரை யினை நிகழ்த்தினார்கள்.

முஸ்தலிபா என்பது மினாவைத் தொடர்ந்து அரபாவிற்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு புனித இடமாகும்

10 ம் நாள் செய்ய வேண்டியவைகள்
1. ஹாஜி சுபஹ் தொழுது விட்டு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொண்டு மினாவிலுள்ள ஜம்ரதுல் அகபா எனும் இடத்திற்குச் சென்று கல்லெறிதல்.
2. ஹஜ் தமத்துவு அல்லது ஹஜ் கிரான் செய்பவர்கள் குர்பானி கொடுத்தல்.
3. தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல் (பெண்கள் தலை முடிகளில் விரல் நுணியளவு வெட்டிக் கொள்ளுதல் போதுமானதாகும்) (இத்துடன் இஹ்ராமின் தடைகள் அனைத்தும் நீங்கி விடும் உடலுறவு கொள்வதைத் தவிர)
4. கஃபாவிற்க்குச் சென்று தவாஃபுல் இஃபாழா எனும் ஹஜ் உடைய தவாஃபை நிறை வேற்றுதல்.
5. அடுத்து ஹஜ் உடைய ஸயீயை நிறை வேற்றுதல். (ஹஜ் கிரான் அல்லது ஹஜ் இப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் உடன் ஸயீ செய்திருந்தால் அவர்கள் இன்றய தினம் ஸயீ செய்யத் தேவை யில்லை. இத்துடன் உடலுறவு உட்பட இஹ்ராமின் தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்)
6. அன்றய இரவு மினாவில் தங்குதல்.

11ஆம் நாள் செய்ய வேண்டியவை
1. மூன்று ஜம்ராக்களீலும் கல்லெறிதல்.
2. அன்றய இரவும் மினாவில் தங்குதல்

12 ஆம் நாள் செய்ய வேண்டியவை
1. மூன்று ஜம்ராக்களீலும் கல்லெறிதல்.
2. 12 ம் நாளுடன் ஊர் திரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன்னதாக மினாவை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
3. 12 ம் நாளுடன் ஊர் திரும்புபவர்கள் கஃபா சென்று தவாஃபுல் வதா எனும் விடை பெறும் தவாஃபை நிறைவேற்றுதல்.

13ஆம் நாள் செய்ய வேண்டியவை
1. மூன்று ஜம்ராக்களீலும் கல்லெறிதல்.
2. கஃபாவிற்க்குச் சென்று தவாஃபுல் வதா எனும் விடை பெறும் தவாஃபை நிறை வேற்றல்.
3. அதன்பின் மக்காவில் தாமதிக்காது திரும்பி விடல்


ஜம்ராக்கள் என்பது கல் எறிகின்ற இடங்களாகும் அவைகளாவன

கல் எறியும் முறை
• 21 சிறிய கற்களை எடுத்துக் கொண்டு ஜம்ரதுல் சுக்ரா எனும் முதலாவது கல் எறிய வேண்டிய இடத்திற்குச் சென்று அங்கு ஏழு கற்களை அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஒவ்வொன்றாக எறிய வேண்டும். அதன் பின் வலது பக்கமாக சென்று கிப்லாவை முன்னோக்கி நின்ற வாறு நீண்ட நேரம் துஆ செய்வது சுன்னத்தாகும்.
• ஜம்ரது;துல் வுஸ்தா எனும் கல் எறியும் இரண்டாவது இடத்திற்க்குச் சென்று முன்பு போன்றே ஏழு கற்களை ஒவ் வொன்றாக அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எறிய வேண்டும். அதன் பின் சற்று இடது பக்கமாகச் சென்று கிப்லாவை முன்னோக்கி நின்றவாறு நீண்ட நேரம் துஆ செய்வது சுன்னத் தாகும்.
• ஜம்ரத்துல் குப்ரா எனும் கல் எறியும் மூன்றாவது இடத்திற்குச் சென்று அங்கும் ஏழு கற்க்களை ஒவ்வொன்றாக அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எறிய வேண்டும் அதன் பின் அங்கு நிற்கவோ துஆ செய்யவோ கூடாது.

ஹஜ்ஜின் பர்ழுகள்:
1. இஹ்ராம் நிய்யத் செய்தல்
2. அரபாவில் தரித்தல்
3. தவாஃபுல் இஃபாழா எனும் பெருநாள் அன்று செய்ய வேண்டிய தவாஃப் செய்தல்
4. ஸஃபா மர்வாக்கிடையே ஸயீ எனும் தொங்கோட்டம் ஓடுதல்

ஹஜ்ஜின் வாஜிபுகள்
1. மீக்காத்தில் இஹ்ராம் நிய்யத் வைத்தல்
2. பகலில் அரபாவில் நுழைந்தவர்கள் சூரியன் மறையும் வரை அங்கு தங்கி இருத்தல்.
3. துல் ஹஜ் 10 ம் இரவு முஜ்தலிபாவில் தங்குதல்.
4. அய்யாமுத் தஷ்ரீக் உடைய இரவுகளில் மினாவில் தங்குதல்.
5. வரிசை பிரகாரம் ஜம்ராக்களில் கல் எறிதல்.
6. தலை முடியை சிரைத்தல் அல்லது கட்டையாக வெட்டுதல்.
7. தவாஃபுல் வதா எனும் பிரியா விடைத் தவாஃப் செய்தல்.


இஹ்ராமில் தவிர்க்கப்பட வேண்டியவைகள்;
 வீண் பேச்சுக்கள் பேசுதல்
 பொய் பேசுதல்
 பிறரைப் பரிகசித்தல்
 மற்றவர்களை நோவினைசெய்தல்
 வீண் விவாதங்களில் ஈடுபடுதல்.இஹ்ராமில் குற்றப்பரிகாரத்தினை ஏற்படுத்தும் செயற்கள்
• தலை மற்றும் உடலின் பிற பாகங்களில் உள்ள முடிகளைக் கத்தரித்தல் அல்லது சிரைத்தல்.
• நகம் வெட்டுதல்.
• வாசணை பூசுதல்
• திருமணம் செய்தல்.
• திருமணம் சம்மந்தப்பட்ட விவகாரங் களில் ஈடுபடுதல்
• உடலுறவு கொள்ளுதல்.
• மனைவியை இச்சையுடன் பார்த்தல், முத்தமிடல், கட்டியணைத்தல்.
• வேட்டையாடுதல்.

ஆண்களுக்கு மட்டும் தனியானவைகள்
• தைக்கப்பட்ட ஆடைகளை அணிதல்.
• தலையை மறைத்தல்,
• காலுறை அணிதல்

பெண்களுக்கு மட்டும் தனியானது
• நிக்காப் எனும் இருகண்களுக்கு மட்டும் துவாரம் இடப்பட்ட முகமூடி அணிதல்.
• மேற்கூறப்பட்ட இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்தால் அவர் பாவியாவதுடன் அவர்மீது அதற்கான குற்றபரிகாரம் கொடுப்பதும் கடமையாகும்.
• தேவைக்காக செய்தால் அவர் பாவியாக மாட்டார் என்றாலும் அவர்மீது அதற்கான குற்றப்பரிகாரம் கொடுப்பது கடமை யாகும்.
• அறியாமல் அல்லது மறதியாக செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார். அவர் மீது எந்தக் குற்றமுமில்லை, குற்றப் பரிகாரமு மில்லை.


தொகுப்பு:
மௌலவி முனாப் நுபார்தீன் (அழைப்பாளர்)
வெளிநாட்டவர்களுக்கான வழிகாட்டல்
தலைமை நிலையம்
(தமிழ், சிங்கள பிரிவு)
த.பெ.இல.142, புரைதா –அல்கஸீம்
சவூதி அரேபியா
தொ.பே.
00966 6 324 8980-116
0561568056
தோ.நகல்:-
3245414
08 ம் நாள் அனைத்து ஹாஜிகளும் ழுஹருக்கு முன்னதாக மினாவிற்குச் சென்று அடுத்தநாள் பஜ்ர் வரை அங்கு தங்குதல் அங்கு நான்கு ரகஆத்து க்களுடைய தொழுகைகளை இர ண்டு ரக்கஅத்தாக சுருக்கி உரிய நேரத்தில் தொழ வேண்டும். ஹஜ் தமத்துவு செய்பவர் தாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஹஜ்ஜுக் காக இஹ்ராம் தரித்து நிய்யத் செய்து கொண்டு அவர்களும் மினாவிற்குச் சென்று விட வேண்டும்.

09 ம்நாள் மினாவிலிருந்து சூரியன் உதித்த பிறகு அரபாவுக்குச் செல்லுதல் அங்கு ழுஹர் அஸர் ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்து சுருக்கி தொழுதல் சூரியன் மறைந்தவுடன் அங்கிருந்து முஸ்த லிபாவுக்கு வந்து மஃரிப் இஷா ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்தும் இஷாவை சுருக்கியும் தொழுது விட்டு அன்றய இரவு அங்கு தங்குதல்

كيفية الدخول في النسكவணக்கத்திற்குள் நுழையும் முறை


كيفية الدخول في النسك
ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்திற்குள் நுழையும் முறை
كيفية الدخول في النسك

قال الله عز وجل:

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ} (197) سورة البقرة

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;.
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் சிறந்தது தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்)

தக்வா உடையோர்களின் அமற்களையே அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்

إنه سبب قبول العمل حيث يقول عز وجل: {إِنَّمَا يَتَقَبَّلُ اللّهُ مِنَ الْمُتَّقِينَ} (27) سورة المائد

உண்மையாகவே அல்லாஹ் பயபக்தியுடையவர்களிட மிருந்துதான் ஏற்றுக் கொள்வான்.) (அல்குர்ஆன்)


 ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்திற்குள் நுழையும் முறை

நாம் மீக்காத் எனும் நிய்யத் வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தினை அடைந்ததும் முதலாவது இஹ்ராம் நிய்யத் செய்வது கொண்டு ஹஜ் உம்ரா போன்ற கிரியைகளை ஆரப்பிக்க வேண்டும்.

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா செய்யச் செல்லும் ஒருவர் அந்த வணக்கத்திற்க்கு நிய்யத் வைத்து குறிப்பிட்ட அந்த வணக்கத்திற்குள் நுழை தலாகும்

இவ்வாறு குறிப்பட்ட வணக்கத்திற்கு நிய்யத் வைத்து வணக்கத்தில் பிரவேசிப்பதற்கு முன் பின்வரும் கருமங்களை செய்து கொள்ளல் வேண்டும்.

1. தனது உடலில் மர்மஸ்தானம், மற்றும் அக்குள் போன்றவற்றில் உள்ள உரோமங்களை அகற்றிக் கொள்ளல் வேண்டும்;

2. நபி صلي الله عليه وسلم அவர்களின்: ',உங்களில் ஒருவர் இஹ்ராமில் ஒரு வேஷ்டியையும் ஒரு மேலாடையையும் இரு காலணிகளையும் அணிந்து கொள்ளட்டும். பெண்கள்; நிக்காப் எனும் இருகண்களுக்கு மட்டும் துவாரம் இடப்பட்ட முகமூடி அணிதலையும், கையுறை அணிதலையும் தவிர்த்து தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்டாத வகையில் தாம் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளட்டும்.' எனும் கட்டளைக்கிணங்க ஆண்கள் தாம் அணிந்திருக்கும் தைக்கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் களைந்து தைக்கப்படாத ஒரு வெண்ணிற வேஷ்டியும், ஒரு வெண்ணிற மேலாடையும் ஒரு காலணியும் மாத்திரமே அணிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் அலங்காரத்தைக் வெளிக்காட்டாத வகையில் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

3. ஆண்கள் தங்கள் ஆடைகளில் படாதவாறு நறுமணம் பூசிக் கொள்ளுதல்

 ஹஜ் உம்ரா போன்ற கிரியைகளின் நிய்யத்

ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடிய ஒருவர் குளித்து இஹ்ராத்திற்குரிய ஆடைகளை அணிந்து கொண்டதன் பிறகு பின்வருமாறு வாயால் மொழிதல் வேண்டும். நபி صلي الله عليه وسلم அவர்கள் லடீப்பைக்க உமரத்தன் வஹஜ்ஜன் என்று கூற நான் கேட்டேன் எனும் அனஸ் رضي الله عنه அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அவர் ஹஜ் செய்பவராக இருந்தால் லbப்பைக்க ஹஜ்ஜன் அல்லது அல்லாஹும்ம் லbப்பைக்க ஹஜ்ஜன்; என்று சொல்வார் அவர் உம்ரா செய்பவராக இருந்தால் லbப்பைக்க உமரத்தன் அல்லதுஅல்லாஹும்ம லbப்பைக்க உம்ரத்தன்; என்று சொல்வார்

 ஹஜ்ஜின் வகைகள்

ஹஜ் உடைய மாதங்களில் அதற்குரிய மீக்காத்தை அடையும் ஒருவர் பின்வரும் மூன்று வகைகிரியைகளில் தாம் விரும்பிய ஒன்றைத் தெரிவு செய்து கொள்வார்.


1. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع
இது ஒரே பயணத்தில் உம்ரா ஹஜ் ஆகிய இரு வணக்கங்களையும் வௌ;வேறாகப் பிரித்து முதலில் உம்ராவை முடித்து இஹ்ராமுடைய உடையை களைந்து விட்டு மீண்டும் ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் நிய்யத் செய்வதாகும்.
இவர் மீகாத்தில்

أَللّهُمِّ لَبَّيْكَ عُمْرَة متمتعة بها إلي الحج
அல்லாஹும்ம லbப்பைக உம்ரதன்
முத்தமத்தியத்தன் பிஹா இலல் ஹஜ்
(பொருள்: யா அல்லாஹ், இதோ! உம்ரா வுக்காக ஆஜராகி விட்டேன்
உம்ராவுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றவுள்ளேன்) என்று கூறுவார்.
இவர் உம்ராவை முடித்து விட்டு மீண்டும் ஹஜ்ஜிக்காக இஹ்ராம் செய்து கொள்ளும் வரை இஹ்ராமை களைந்து கொள்ள முடியும். இவருக்கு இஹ்ராமின் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கி விடும். பிறகு இவர் துல்ஹஜ் 9ம் நாள் முடிவதற்குள்ளாக ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் நிய்யத் செய்வதாகும். இவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும்.

2. ஹஜ் இப்ராத் حج الافراد
இது ஹஜ் மட்டும்; செய்தலாகும். இவர் மீக்காத்தில்

أللهم لبيك حجا
அல்லாஹும்ம லbப்பைக்க ஹஜ்ஜன் என்று சொல்ல வேண்டும்.
பொருள்:- யா அல்லாஹ், இதோ! ஹஜ்ஜிக்காக ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார்.

இவ்வாறு ஹஜ் மட்டும் செய்வதற்கு நிய்யத் வைத்துக் கொண்டவர் தவாஃபுல் குதூம் (மக்காவில் நுழைந்தவுடன் செய்யும் தவாஃப்) மட்டும் செய்து விட்டு துல்ஹஜ் 10ஆம் நாள் தலைமுடியை மழிக்கும் வரை அல்லது குறைத்துக் கத்தரிக்கும் வரை இஹ்ராம் உடைய உடையுட னேயே இருக்க வேண்டும். அவர் குர்பான் கொடுக்கத் தேவையில்லை.

3. ஹஜ் கிரான் حج القران
இது உம்ராவையும், ஹஜ்ஜையும் ஒன்றாக சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்வதாகும். இவர் மீகாத்தில்,

أللهم لبيك عمرة وحجا
அல்லாஹும்ம லbப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று சொல்ல வேண்டும்.
பொருள்:-யா அல்லாஹ், இதோ! உம்ராவுக்காகவும் ஹஜ்ஜிக்காகவும் ஆஜராகி விட்டேன்; என்று சொல்வார். அல்லது உம்ராவிற்கு மட்டும் நிய்யத் செய்து உம்ராவுக்குரிய தவாஃபை நிறைவேற்றுவதற்கு முன் உம்ராவுடன் இணைத்து ஹஜ்ஜையும் செய்வதாக நிய்யத் செய்து கொள்வார்.

இவ்வாறு ஹஜ்ஜை உம்ராவுடன் சேர்த்து செய்வதாக நிய்யத் செய்தவர் உம்ராவுக்குரிய ஸயீயை முடித்து விட்டு துல்ஹஜ்
10 ம் நாள் தலைமுடியை மழிக்கும் வரை அல்லது குறைத்துக் கத்தரிக்கும் வரை இஹ்ராம் உடைய உடையுடனேயே இருக்க வேண்டும். இவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும். மூவகை கிரியைகளும், அவைகளுள் சிறந்ததும்.
1. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع ஹஜ் கிரான் حج القران ஆகிய இரண்டும் ஹஜ்ஜும் உம்ரா வும் கலந்தது. ஹஜ் இப்ராத் حج الافراد என்பது ஹஜ் மட்டும் செய்தலாகும்.

2. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع ஹஜ் கிரான் حج القران ஆகிய இரண்டுக்கும் குர்பான் கொடுப்பது கட்டாயமாகும் ஹஜ் இப்ராத் حج الافراد திற்கு குர்பான் கொடுப்பது கட்டாயமில்லை.
3. ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع விற்கு இரண்டு தவாஃபுகளும் , இரண்டு ஸயீகளும் செய்ய வேண்டும். அதாவது முதலாவது உம்ராவிற்காக ஒரு தவாஃபும் ஒரு ஸயீயும் செய்ய வேண்டும். அடுத்ததாக ஹஜ்ஜிக்காக ஒரு தவாஃபும் ஒரு ஸயீயும் செய்ய வேண்டும். ஹஜ் கிரான் حج القران ஹஜ் இப்ராத் حج الافراد ஆகிய இரண்டுக்கும் சுன்னத்தான ஒரு தவாஃபும் பர்ழான ஒரு தவாஃபும் பர்ழான ஒரு ஸயீயும் மட்டுமே செய்ய வேண்டும் இதில் சுன்னத்தான மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்ய வேண்டிய (தவாஃபுல் குதூம்) தவாஃபை விடுவதால் குற்ற ஏதும் இல்லை ஆனால் பர்ழான பெருநாளனன்று செய்ய வேண்டிய தவாஃபை அதாவது (தவாஃபுல் இபஃபாழா) கட்டாயம் செய்தாக வேண்டும் இது விடுபட்டால் ஹஜ் நிறைவேறாது. தவாஃபுல் குதூம் உடன் ஸயீ செய்திருந்தால் அவர் தவாஃபுல் இபஃபாழா விற்குப் பிறகு ஸயீ செய்ய தேவையில்லை.

இம்மூவகை கிரியைகளிலும் சிறந்தது ஹஜ்ஜு தமத்துஉ حج التمتع ஆகும் ஏனெனில் நபி صلي الله عليه وسلم அவர்கள் தமது தோழர்களுக்கு இதனையே செய்யுமாறு கூறினார்கள். அடுத்து சிறந்தது ஹஜ் கிரான் حج القران அடுத்ததாக சிறப்புக்குரியது ஹஜ் இப்ராத் حج الافراد ஆகும்.
இம்மூவகை கிரியைகளில் ஒன்றில் பிரவேசித்து விட்ட ஒருவர் பின்வரும் தல்பியாவை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ
لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْد وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
.

லப்bபைக் அல்லாஹும்ம லப்bபைக், லப்bபைக் லா ஷரீக்க லக்க லப்bபைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க், லா ஷரீக்க லக்.
பொருள்:- இதோ உன்னிடம் ஆஜராகி விட்டேன். யா அல்லாஹ்வே! இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது, இதோ உன்னிடம் ஆஜராகிவிட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருற்களும், ஆட்;சியும் உனக்கே சொந்தம், உனக்கு எந்தவொரு இணையும் கிடையாது.

இந்த தல்பியா இஹ்ராம் செய்ததிலிருந்து ஆரம்பித்து உம்ராவாக இருந்தால் தவாஃபை ஆரம்பிப்பதுடனும் ஹஜ் என்றால் பெருநாளன்று ஜம்ரத்துல் அக்கபாவில் கல் எறிவதுடனும் முடிவடையும்.

Thursday, November 09, 2006

مراتب الدين

مراتب الدين

عَن عُمَر رضي اللهُ عنه أَيْضاً قال: " بَيْنَما نَحْنُ جُلْوسٌ عِنْدَ رسُولِ الله صلى الله عليه وسلم إذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَياضِ الثِّيَاِب شَديدُ سَوَادِ الشَّعَرِ، لا يُرَى عليه أَثَرُ السَّفَرِ ولا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ، حَتى جَلَسَ إلى النَّبِّي صلى الله عليه وسلم، فأسْنَدَ رُكْبَتَيْهِ إلى رُكْبَتَيْهِ ووَضَعَ كَفَّيْهِ على فَخِذَيْهِ، وقال: يا محمَّدُ أَخْبرني عَن الإسلامِ، فقالَ رسُولُ الله صلى الله عليه وسلم: الإسلامُ أَنْ تَشْهَدَ أَنْ لا إلهَ إلا اللهُ وأَنَّ محمِّداً رسولُ الله، وتُقِيمَ الصَّلاةَ، وتُؤتيَ الزَّكاةَ، وتَصُومَ رَمَضان، وتَحُجَّ الْبَيْتَ إن اسْتَطَعتَ إليه سَبيلاً. قالَ صَدَقْتَ. فَعَجِبْنا لهُ يَسْأَلُهُ ويُصَدِّقُهُ، قال : فَأَخْبرني عن الإِيمان. قال: أَن تُؤمِنَ باللهِ، وملائِكَتِهِ وكُتُبِهِ، ورسُلِهِ، واليَوْمِ الآخِرِ، وتُؤمِنَ بالْقَدَرِ خَيْرِهِ وشَرِّهِ. قال صدقت. قال : فأخْبرني عَنِ الإحْسانِ. قال: أنْ تَعْبُدَ الله كَأَنَّكَ تَرَاهُ فإنْ لَمْ تَكُنْ تَرَاهُ فإنَّهُ يَرَاك. قال: فأَخبرني عَنِ السَّاعةِ، قال:ما المَسْؤولُ عنها بأَعْلَمَ من السَّائِلِ . قال: فأخبرني عَنْ أَمَارَتِها، قال: أن تَلِدَ الأمَةُ رَبَّتَها، وأَنْ تَرَى الحُفاةَ العَُراةَ العالَةَ رِعاءَ الشَّاءِ يَتَطَاوَلُون في الْبُنْيانِ، ثُمَّ انْطَلَقَ، فَلَبثْتُ مَلِيّاً، ثُمَّ قال : يا عُمَرُ، أَتَدْرِي مَنِ السَّائِلُ؟ قُلْتُ: اللهُ ورسُولُهُ أَعلَمُ . قال: فإِنَّهُ جِبْرِيلُ أَتاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ ". رواه مسلم.

உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :
ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக் கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத்2 கொடுப்பது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அ வரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். ''அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்'' என்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார். தொடர்ந்து அவர் இஹ்ஸான்4 (நல்ல செயல்கள்) பற்றி எனக்;குச் சொல்லுங்கள் என்றார்.

''நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்'' எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத் தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவது, ''அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள்5. அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார் (ஸல்) அவாகள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்'' என்று கூறினார்கள். - முஸ்லிம்

Wednesday, November 08, 2006

النية

النية
عن أَمِيرِ المُؤمِنِينَ أَبي حَفْصٍ عُمَرَ بنِ الخطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: " إِنَّما الأَعْمَالُ بالنِّيَّاتِ وإنَّما لكُلِّ امْرِىءٍ ما نَوَى، فَمَنْ كانَتْ هِجْرَتُهُ إلى اللهِ ورَسُولِهِ فَهِجْرَتُهُ إلى اللهِ ورَسُولِهِ، ومَنْ كانَتْ هِجْرَتُهُ لِدُنْيا يُصِيبُها أو امْرأةٍ يَنْكِحُها فَهِجْرَتُهُ إلى ما هَاجَرَ إليه". رواهُ إمَامَا المُحَدِّثِينَ : أبُو عَبْدِ اللهِ محمدُ بنُ إسماعيلَ بن إبراهيمَ بن المُغِيرةِ بن بَرْدِزْبَهْ البُخَاريُّ، وأبُو الحُسَيْنِ مُسْلِمُ بنُ الحَجَّاج بن مُسْلمٍ القُشَيْرِيُّ النَّيسابُورِيُّ في صَحِيحَيْهما اللَّذَيْنِ هُما أَصَحُّ الْكُتُبِ المُصَنَّفَةِ.
அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் رضي الله عنه அவர்கள் பெருமானார் صلي الله عليه وسلم அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அபடுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்.
ஆகவே ஒருவர் அல்லாஹ்விற்காகவும், அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும்.
ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்;லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். (புகாரீ, முஸ்லிம்)

Saturday, October 28, 2006

thai

தாயே!

கருவினில் என்னை தரித்து
பத்து மாதம் சுமந்து
பத்தினியாய் வாழ்து
பல துன்பம் சில கண்டு
கண்ணியமாய் பெற்ற என்-தாயே

நீ கொண்ட நேசங்கள்
அது போன்ற பாசங்கள்
விடை பெற்ற உண்ணால் அன்றி
விடிவுதான் யார் கொடுப்பார்

பூமி தனில் ஏந்தனுக்கு
நான் படுத்த உண் மடிம்
நேரான வாழ்வுக்கு உண் அடியும்
கலை போன்ற அன்னையே
உண்ணை ஆதரிக்கறேன் என்,ஏ.எம.முஸ்தஃதில்(இலங்கை)

Monday, October 09, 2006

to the all muslims

இது கடந்த 2006.06.17 ம் திகதி இலங்கையைச் சேர்ந்த முனாப் நுபார்தீன் ஆகிய என்னால் சர்வதேச பொய்யன் பீ.ஜே யிற்கு அனுப்பப்பட்ட அறைகூவலாகும்.

பகிரங்க அழைப்பு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அண்மைக்காலமாக இந்திய தமிழ் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒருவர் அல்லது ஒரு கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் தவ்ஹீத் போர்வைக்குள் இருந்து கொண்டு இஸ்லாத்தை தமக்கு தேவையான மாதிரி தமது மனோ இச்சைக்கு இசைவாக திரிபு படுத்தியும், நபித்தோழர்களை இழிவு படுத்தியும், இஸ்லாமிய கொள்கை கோட்ப்பாடுகளுக்கும், சரீஅத்திற்கும் எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழ் நாட்டு மார்க்க அறிஞர்கள் எங்கே என்ற கேள்வி எழுகின்றது,

மட்டுமின்றி 'உரை கல்லு இல்லாத இடத்தில் பித்தளை தான் தங்கம்' என்று வாதிடுமாம் எனும் முது மொழி ஞாபகத்திற்கு வருகின்றது. இவர்களின் தேனிலும் இனிய நாவண்மையால் நம் சமூகத்தில் விதைக்கப்படும் மார்க்கத்திற்கு முரணான கருத்த்துக்களை களை எடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

ஆகவே அவர்களின் மக்களை ஏமாற்றும் முக்கிய ஆயுதம் விவாதம் என்பதனால் நான் அவர்களுடன் விவாதத்திற்கு எந்நேரமும் தயாராக உள்ளேன் என்பதனை இத்தாள் அவர்களுக்கும் அனைத்து தமிழ் முஸ்லிம் உலகத்திற்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனவே மேற்படி இயக்கத்தினர்கள் அல்லது அவர்களின் உலகப் பேரறிஞர் காலதாமதமின்றி விவாதத்திற்கு தயாராகட்டும்.

விவாதத்தின் விதிகள்.

 விவாதம் சவூதி அரேபியாவில் நடைபெறும்

 விவாதத்திற்குரிய சகல செலவினங்களும் என்னைச் சாரும்.

 விவாதம் எதைக் கருப்பொருளாக வைத்து நடாத்தப்படுகின்றதோ அதனை மட்டுமே விவாதிக்க வேண்டும்.

 விவாதத்தில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் விவாதம் அரபு மொழியில் நடைபெறல் வேண்டும்,

 விவாதத்திற்கு சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று நடுவர்களாக இருந்து விவாதத்தினை நடாத்தும்.

 இறுதியில் விவாதமும் விவாதத்தின் தீர்மானமும் அவரவர் தரப்பிலிருந்தும் தலா ஒருவர் தமிழில் மொழிபெயர்ப்பதற்காக நியமிக்கப்பட்டு ஒளிவு மறைவின்றி அனைவர்களுக்கும் அதன் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் விநியோகிகப்படல் வேண்டும்.

 விவாதம் அல்குர்ஆன் அல்ஹதீஸை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் அறிவுக்கோ, கால சூழ்நிலைகளுக்கோ பொருந்த வேண்டும் என்பது கிடையாது.

 விவாதம் சுற்றி வளைக்காது நேரடி விளக்கங்கள் மாத்திரம் முன்வைக்கப்படல் வேண்டும்

 விவாதம் நடை பெறும் நாள் பற்றி இரு தரப்பினரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும்

அது இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு மேற்படாதிருக்கவேண்டும். மேற்படி விவாதத்திற்கு தாங்கள் தயார் என்றால் தங்களது ஒப்புதலை மேலுள்ள எனது மின்னஞ்சல் முகவரியிற்கு அனுப்பி வைத்தால் காலதாமதத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம் அவ்வாறு கால தாமதம் தவிர்க்கப்படுவதனால் தாங்களும் தாங்களை நம்பிய பாமர மக்களும் தொடாந்தும் வழிகேட்டில் செல்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!

இப்படிக்கு

உண்மையுள்ள

முனாப் நுபார்தீன்-ஜே.பி

என்னால் கடந்த 2006.06.17 ம் திகதி பி.ஜே யிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிற்கு அவர் அவரது இணையதளத்தில் இட்டிருந்த பதில் கீழே:

அன்புள்ள சகோதரர் முனாப் நூர்தீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் பகிரங்க விவாத அழைப்பு என்ற மெயில் என் பார்வைக்கு வந்தது. அந்த அழைப்பிலேயே உங்கள் மதியீனம் பளிச்சிடுகிறது!

விவாதம் செய்வதாக இருந்தால் அது குறித்த விதிகளைக் கலந்து பேசி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்தச் சாதாரண உண்மையைக் கூட அறியாதவராக நீங்கள் இருக்கின்றீர்கள்.

விவாதத்தின் விதிகள் என்று நீங்களே பட்டியல் போட்டுள்ளீர்கள்.
நீங்கள் அரபு நாட்டுப் பணத்துக்காகக் கூலி வேலை பார்ப்பதாலும், பல்வேறு பணிகளைச் சொல்லி அரபுகளிடம் 'சல்லி' (பணம்) அடிப்பதாலும் விவாதம் சவூதி அரேபியாவில் நடைபெறும் என்றும், சவூதி அரேபிய அறிஞர்களை நடுவர்களாக வைக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக முடிவு செய்து உத்தரவு போட்டுள்ளீர்கள்.

எனக்கு இது போன்ற அவசியம் ஏதும் இல்லை. அரபுகளின் சல்லிக்கு நான் அடிமை இல்லை.

விவாதம் நடத்துவது என்றால் கருத்தைச் சொல்வதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது இரு தரப்புக்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவில்தான் இந்தச் சுதந்திரம் உள்ளது என்பதும், சவூதி அரேபியாவில் இந்தச் சுதந்திரம் இல்லை என்பதும் மூளையுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அரேபிய அறிஞர்களை நடுவர்களாக வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறீர்கள். அரேபிய மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை சல்லிக்காக நீங்கள் வாந்தி எடுக்கின்றீர்கள். எனவே நடுவர்களான அவர்களும் உங்கள் கருத்திலேயே இருக்கும் போது அவர்கள் எப்படி நடுவர்களாக இருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லை.


உங்கள் வாதப்படி தமிழ் பேசும் மக்களைத் தான் நான் குழப்புகிறேன். தமிழ் பேசும் மக்களைத் தான் நீங்களும் குழப்பத்திலிருந்து விடுவிக்க(?) முன்வருகின்றீர்கள். எனவே தமிழ் மொழியில் தமிழகத்தில் விவாதம் நடத்துவது தான் முறை.

விவாதம் நடத்துவது என்றால் முதலில் நமக்கிடையே கருத்து வேறுபாடு உள்ள விஷயங்கள் என்ன? அதில் எந்த எந்தத் தலைப்புகள் பற்றி நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்கள் என்பது தான் விவாதத்தில் முதலில் முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும். அது பற்றி உங்கள் கடிததத்தில் ஒரு வார்த்தையும் இல்லை. உண்மையாக விவாதம் நடத்துபவர்களுக்குத் தான் அது பற்றிக் கவலை? மூளையுள்ள எவனும் உங்களுடைய கிறுக்குத்தனமான நிபந்தனையை ஏற்க மாட்டான் என்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் நாடகம் ஆடுவதால் தலைப்பைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

முனாப் நூர்தீன் அவர்களே!

உங்களிடம் உண்மையிருந்தால் விவாதம் செய்வது பற்றி சந்தித்துப் பேச முன் வாருங்கள்! இரு தரப்பும் பேசி விவாத ஒழுங்குகளை முடிவு செய்வோம்.

இலங்கையில் நமது தாய் மொழியில் விவாதம் செய்ய நீங்கள் ஒப்புக் கொண்டால் உங்களைப் போல் அரபு மொழி படிக்காத எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஏற்பாடு செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் அவ்விவாதத்தில் அவர் உங்களை வெல்வார். அவர் முன்னிலையில் நீங்கள் விவாதத்தில் வென்று விட்டால் நானே தோற்று விட்டதாக ஒப்புக் கொள்கிறேன். தாமதமின்றி பதில் தந்தால் தலைப்புகள் மற்றும் விவாத ஒழுங்குகளைப் பேசி ஒப்பந்தம் செய்ய பிரதிநிதியை அனுப்புகிறேன்.


அரபு மொழி தெரியாதவரிடம் விவாதம் செய்வது சாத்தியமில்லை என்ற ரெடிமேட் பதிலை நீங்கள் அளித்தால் 'விவாதம் செய்வதற்கு அரபு மொழி தெரிந்திருப்பது அவசியமா?' என்ற தலைப்பில் அந்த இளைஞருடன் விவாதியுங்கள்.

இந்தியாவில் விவாதம் நடத்தத் தயார் என்றால் எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு இஞைரை உங்களுடன் விவாதம் செய்ய ஏற்பாடு செய்கிறேன். உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்ய இவர்களே போதும்.
விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகிறீர்கள் என்பதை ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கவும்.

நான் ஏற்கனவே இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் பின்னங்கால் பிடரியில் பட நீங்கள் ஓட்டம் எடுத்ததை இலங்கை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

அன்புடன்,

பி.ஜைனுல் ஆபிதீன்

பீ.ஜே எனக்கு முகவரியிட்டு அவரது இணையதளத்தில் இட்டிருந்த பதிலுக்கு நான் அனுப்பிய பதில். இதற்கு இன்னும் எவ்வித பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களுக்கு!

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக. (அல்குர்ஆன்)

2006.06.17ம் திகதிய எனது விவாதத்திற்கான அழைப்பிற்கு நீர் உமது இணையத் தளத்தில் அளித்திருக்கும் பதிலிலிருந்து உமது ஞான சூனியம் தெளிவாகத் தெரிகின்றது.

• முதலில் உம்போன்ற பொய்யர்கள் என்னை சகோதரன் என்று கூறி யதற்காக நான் வெட்கப்படுகின்றேன். நீர் உலக மகா பொய்யன் என்பதற்கும், மிகப்பெரும் வழி கேடன் என்பதற்கும் உமது அறிக்கையே போதிய சான்றாகும்.

• அடுத்ததாக நீர் வாய்மையானவர் என்றால் நான் உமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அழைப்பிற்கான பதிலை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது எனது தொலை பேசி மூலமோ அல்லது எனது முகவரி ஊடாகவோ தெரிவித்திருக்க வேண்டும் அதுதான் அறிவுடமை. அதனை விட்டுவிட்டு உமது ஆதரவாளர்களை மட்டும் திருப்திப் படுத்துவதற்காக எனது பெயருக்கு விலாசமிட்டு வெட்கமின்றி உமது இணையத்தளத்தில் இட்டுள்ளமை உமது கோழைத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டுகின்றன.

• நான் அறபு நாட்டுப் பணத்திற்காக கூலி வேலை பார்ப்பவன் என்று நீர் ஏழனமாகக் கூறியுள்ளீர். ஆம் நான் அறபு நாட்டுப்பணத்திற்காக எனது உழைப்பை செலுத்தி அதற்கான கூலியினைப் பெறுவது உண்மையே. நீரோ என் போன்று அறபு நாட்டுப்பணத்திற்காக தனது காலத்தையும், சிரமத்தையும் தியாகம் செய்து உழைக்கும் அப்பாவிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுகின்றீர். இதை எண்ணி இஸ்லாமியன் என்ற வகையில் நான் வெட்கப்படுகின்றேன்.

• விவாதம் நடாத்துவதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அது சவூதி அரேபியாவில் இல்லை என்றும், அது இந்தியாவில்த்தான் உள்ளதென்றும் கூறியுள்ளீர். அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாகக்கொண்டு ஆட்சி புரியும் முற்று முழுதாக முஸ்லீம்களே வாழும் ஒரு நாட்டில் இஸ்லாத்தினைப்பற்றி பேசமுடியாமல் அந்நிய மதத்தவர்கள் ஆட்சி புரியும் ஒரு நாட்டில்த்தான் இஸ்லாத்தை பேச முடியும் என்று நீர் கூறியதிலிருந்து உமது முட்டாள்த்தனம் தெளிவாகின்றதோடு நீர் பேச வருவது இஸ்லாத்தைப்பற்றித்தானா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

• அரபு நாட்டு அறிஞர்கள் எனது கருத்திலேயே இருப்பதாகவும் அவர்களின் மத்தியஸ்தத்தினை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளீர். அல்லாஹ்விற்காகவும் இறையச்சத்துடனும் மார்க்கம் பேசுபவர்கள்தான் அரபு நாட்டு அறிஞர்கள். உம்மைப்போன்று தலைக்கனம் பிடித்து கிறுக்குத்தனமாக இஸ்லாம் பேசுபவர்கள் அல்லர் அவர்கள். (கழுதைக்குத்தெரியுமா? கற்பூர வாசனை)

• விவாதத்திற்கு இருதரப்பும் சம்மதித்ததன் பின்புதான் விவாதத்திற்கான தலைப்பு பற்றி தீர்மானிக்கப்படும் எனும் அடிப்படைகூட தெரியாத மடமையதனை உலகில் உம்மிடமே காணுகின்றேன்.

• உமது பதிலில் இரண்டாம் பக்கத்தில் மூன்றாவது பந்தியில் ஒப்பந்தம் செய்யப் பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளீர் அதே பக்கத்தில் ஐந்தாவது பந்தியில் விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகின்றீர் என்று கேட்டுள்ளீர். ஒரே பக்கத்தில் முன்னுக்குப்பின் முரணான இந்த முரன்பாடு நீர் எடுத்ததையெல்லாம் முன்னுக்குப்பின் முரணாகவே பேசுவதில் புலமை வாய்ந்தவர் என்பதனை நிரூபித்து காட்டுகின்றது.

• நீர் இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் நான் மறுத்ததாக என்மீது அபாண்டமான பொய் சுமத்தியுள்ளீர். அவ்வாறு நீர் என்னை விவாதத்திற்கு அழைத்து நான் மறுத்தது எப்போது என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும் அல்லது நீர்தான் உலக மகா பொய்யன் என்பதனை ஒத்துக்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு

முனாப் நுபார்தீன் ஜே.பி

ததஜ ஆதரவாளர்களாகவிருக்கும் ஆலிம்களுக்கு!

தம்மை ததஜ என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் மௌலவிமார்களுக்கும், அல்லது அவர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மௌலவி மார்களுக்கும் உலமாக்கள் என்ற வகையில் இந்த அழைப்பினை விடுக்கின்றேன்.

இது (''எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) எனும் திருமறையின் 7:164 வது வசணத்திற்கிணங்க எழுதப்படுகின்றது.

அன்புடையீர்!

நேர்வழியில் இருப்போர் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

அண்மைக்காலமாக உங்கள் அல்லது நீங்கள் ஆதரவு வழங்கும் அமைப்பின் இஸ்தாபகர் மார்க்கத்திற்கு முறனான பல கருத்துக்களை பாமர மக்களுக்கு மத்தியில் பரப்பி வருவது தாங்கள் அறியாதவொன்றல்ல. என்றாலும் தொடர்ந்தும் தாங்கள் ஏன்தான் பாவத்திற்கு துணை செய்கின்றீர்கள் என்பது ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது.

எனவேதான் நான் எனது கடமையிலிருந்து விடுபட வேண்டும் எனும் எண்ணத்தில் பி. ஜே அவர்களை விவாதத்திற்கு அழைத்திருந்தேன். என்றாலும் அவரின் பதில் ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதனால் யாரெல்லாம் அவர் சொல்வதுதான் சரி என்று அவருக்கு வக்காலத்து வாங்குகின்றார்களோ அவர்களுக்கு இந்த அழைப்பினை பகிரங்கமாக விடுக்குகின்றேன்.

 மேற்படி நபரின் மார்க்க விரோத போக்கு தாங்களுக்கு புரியவில்லையா ?

 அல்லது தெரிந்து கொண்டே அல்லாஹ்வை அஞ்சாது மறைக்குகின்றீர்களா?

 அல்லது அவர் சொல்வது சரி என்று கூறுகின்றீர்களா?

நிச்சயமாக மேற்கூறப்பட்ட மூன்று நிலைகளுள் ஒரு நிலையில்தான் நீங்கள் இருக்க முடியும் எனவே மேற்கூறப்பட்ட நிலைகளில் முதல் நிலையில் நீங்கள் இருந்தால் அல்லாஹ் உங்களை மன்னிப்பான் உடனே அவர்களை விட்டு பிரிந்து விடுங்கள்.

இரண்டாம் நிலையில் இருப்பீர்களானால் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று மட்டுமே என்னால் கூற முடியும்

மூன்றாம் நிலையில் அதாவது அவர் சொல்வது சரி என்ற நிலையில் இருப்பீர்களானால் வாருங்கள் விவாதத்திற்கு. முடியாவிட்டால் தவறை ஒப்புக்கொண்டு தவ்பா செய்து உண்மை விசுவாசியாகி விடுங்கள் .

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக.

குறிப்பு:-தொடர்புகளுக்கு எனது மின் அஞ்சலைப்பயன்படுத்தவும் அல்லது 00966 6 561568056 எனும் தொலை பேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

பொது மக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்

இன்றைய உலகில் மக்களுக்கு மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்ப்படுத்திக் கொண்டிருப்பது வெகுஜன தொலை தொடர்பு சாதனங்களாகும். இதனை முழுமையாகப் பயன்படுத்தி மக்களையெல்லாம் ஏமாளிகளாக ஆக்கிக் கொண்டிருப்பவர்தான் தென் இந்தியாவைச் சேர்ந்த பீ.ஜே என்று அறிமுகமாகியுள்ள பொய்யன் என்பதனை மக்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அடையாளம் காட்டுவதன் மூலம் இஸ்லாத்தை தீய வடிவில் உருமாற்றம் செய்து கொண்டிருக்கும் பொய்யன் பி.ஜே யின் வழிகெடுத்தலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இப்படிக்கு:

மெளலவி முனாப் நுபார்தீன்-ஜே.பி


Friday, July 21, 2006

பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு!

அல்லாஹ்வின் திருப்பெயரால்

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக. (அல்குர்ஆன்)

அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்..

17-06-2006 -ந் திகதியிலிருந்து 3 மாதங்கள் அவகாசம் குறிப்பிடப்பட்ட நான் அனுப்பிய விவாத அழைப்பிற்கு நீர் உமது இணையத் தளத்தில் அளித்திருக்கும் பதிலிலிருந்து உமது ஞான சூனியம் தெளிவாகத் தெரிகின்றது.

- முதலில் உம்போன்ற பொய்யர் என்னை சகோதரன் என்று கூறியதற்காக நான் வெட்கப்படுகின்றேன். நீர் உலக மகா பொய்யன் என்பதற்கும், மிகப்பெரும் வழி கேடன் என்பதற்கும் உமது அறிக்கையே போதிய சான்றாகும்.

- அடுத்ததாக நீர் வாய்மையானவர் என்றால் நான் உமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அழைப்பிற்கான பதிலை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது எனது தொலை பேசி மூலமோ அல்லது எனது முகவரி ஊடாகவோ தெரிவித்திருக்க வேண்டும் அதுதான் அறிவுடமை. அதனை விட்டுவிட்டு உமது ஆதரவாளர்களை மட்டும் திருப்திப் படுத்துவதற்காக எனது பெயருக்கு விலாசமிட்டு வெட்கமின்றி உமது இணையத்தளத்தில் இட்டுள்ளமை உமது கோழைத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டுகின்றன.

- நான் அரபு நாட்டுப்பணத்திற்காக கூலி வேலை பார்ப்பவன் என்று நீர் ஏளனமாகக் கூறியுள்ளீர். ஆம் நான் அரபு நாட்டுப் பணத்திற்காக எனது உழைப்பை செலுத்தி அதற்கான கூலியினைப் பெறுவது உண்மையே. நீரோ என் போன்று அரபு நாட்டுப்பணத்திற்காக தனது காலத்தையும், சிரமத்தையும் தியாகம் செய்து உழைக்கும் அப்பாவிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுகின்றீர். இதை எண்ணி இஸ்லாமியன் என்ற வகையில் நான் வெட்கப்படுகின்றேன்.

- விவாதம் நடாத்துவதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அது சவூதி அரேபியாவில் இல்லை என்றும், அது இந்தியாவில்தான் உள்ளதென்றும் கூறியுள்ளீர். அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிப் புரியும் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் இஸ்லாத்தினைப் பற்றி பேச முடியாமல் அந்நிய மதத்தவர்கள் ஆட்சி புரியும் ஒரு நாட்டில்தான் இஸ்லாத்தை பேச முடியும் என்று நீர் கூறியதிலிருந்து உமது முட்டாள்தனம் தெளிவாகின்றதோடு நீர் பேச வருவது இஸ்லாத்தைப் பற்றித்தானா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

- அரபு நாட்டு அறிஞர்கள் எனது கருத்திலேயே இருப்பதாகவும் அவர்களை நடுவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளீர். அல்லாஹ்விற்காகவும் இறையச்சத்துடனும் மார்க்கம் பேசுபவர்கள்தான் அரபு நாட்டு அறிஞர்கள். உம்மைப்போன்று தலைக்கனம் பிடித்து கிறுக்குத்தனமாக இஸ்லாம் பேசுபவர்கள் அல்லர் அவர்கள். (கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை)

- விவாதத்திற்கு இருதரப்பும் சம்மதத்தின் பின்புதான் விவாதத்திற்கான தலைப்பு பற்றி தீர்மானிக்கப்படும் எனும் அடிப்படை கூட தெரியாதவராக உம்மையே காணுகின்றேன்.

- உமது பதிலில் ஒப்பந்தம் செய்யப் பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளீர். அதே கடிதத்தில் விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகின்றீர் என்று முன்னுக்குப்பின் முரணாகவே பேசுவதில் புலமை வாய்ந்தவர் என்பதனை நிரூபித்து காட்டுகின்றது.

- நீர் இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் நான் மறுத்ததாக என்மீது அபாண்டமான பொய் சுமத்தியுள்ளீர். அவ்வாறு நீர் என்னை விவாதத்திற்கு அழைத்து நான் மறுத்தது எப்போது என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்படியில்லையென்றால் நீர் உலக மகா பொய்யன் என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன் ஜே.பி

தொடர்புகளுக்கு:
0094252247374, 252247353, 724589459, 776617610 அல்லது nufardeenjp@yahoo.com

Saturday, June 17, 2006

பகிரங்க விவாத அழைப்பு

அன்புடையீர்!‎
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்‎..

அண்மைக்காலமாக இந்திய தமிழ் நாட்டைத்தாயகமாகக் கொண்ட ஒருவர் அல்லது ஒரு ‎‎கூட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் தவ்ஹீத் போர்வைக்குள் இருந்துக் கொண்டு ‎‎இஸ்லாத்தை தமக்கு தேவையான மாதிரி தமது மனோ இச்சைக்கு இசைவாக திரிபு படுத்தியும், ‎நபித்தோழர்களை இழிவு படுத்தியும், இஸ்லாமிய கொள்கை கோட்ப்பாடுகளுக்கும், ஷரீஅத்திற்கும் ‎எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழ் நாட்டு மார்க்க அறிஞர்கள் ‎எங்கே என்ற கேள்வி எழுகின்றது, மட்டுமின்றி 'உரை கல்லு இல்லாத இடத்தில் பித்தளை தான் ‎தங்கம்' என்று வாதிடுமாம் எனும் முது மொழி ஞாபகத்திற்கு வருகின்றது.

இவர்களின் தேனிலும் ‎‎இனிய நாவண்மையால் நம் சமூகத்தில் விதைக்கப்படும் மார்க்கத்திற்கு முரனான கருத்துக்களை ‎களை எடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு. ஆகவே அவர்களின் மக்களை ஏமாற்றும் முக்கிய ‎ஆயுதம் விவாதம் என்பதனால் நான் அவர்களுடன் விவாதத்திற்கு எந்நேரமும் தயாராக உள்ளேன் ‎என்பதனை இதன் மூலம் அவர்களுக்கும் அனைத்து தமிழ் முஸ்லிம் உலகத்திற்கும் ‎தெரிவித்துக் கொள்கின்றேன்.‎

எனவே மேற்படி இயக்கத்தினர்கள் அல்லது அவர்களின் உலகப் பேரறிஞர் காலதாமதமின்றி விவாதத்திற்கு ‎தயாராகட்டும். ‎

விவாதத்தின் விதிகள்.‎

 விவாதம் சவூதி அரேபியாவில் நடைபெறும்‎.

 விவாதத்திற்குரிய சகல செலவினங்களும் என்னைச்சாரும். ‎

 விவாதம் எதைக்கருப்பொருளாக வைத்து நடாத்தப்படுகின்றதோ அதனை மட்டுமே விவாதிக்க வேண்டும். ‎

 விவாதத்தில்; சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் விவாதம் ‎அரபு மொழியில் நடைபெறல் வேண்டும், ‎

 விவாதத்திற்கு சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று நடுவர்களாக இருந்து விவாதத்தினை ‎நடாத்தும். ‎

 ‎இறுதியில் விவாதமும் விவாதத்தின் தீர்மானமும் அவரவர் தரப்பிலிருந்தும் தலா ஒருவர் தமிழில் ‎மொழிபெயர்ப்hதற்காக நியமிக்கப்பட்டு ஒளிவு மறைவின்றி அனைவர்களுக்கும் அதன் மொழிபெயர்க்கப்பட்ட ‎பிரதிகள் விநியோகிகப்படல்வேண்டும்.‎

 விவாதம் அல்குர்ஆன் அல்ஹதீஸை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் அறிவுக்கோ, கால ‎‎சூழ்நிலைகளுக்கோ பொருந்தவேண்டும் என்பது கிடையாது.‎

 விவாதம் சுற்றி வளைக்காது நேரடி விளக்கங்கள் மாத்திரம் முன்வைக்கப்படல் வேண்டும்‎.

 விவாதம் நடை பெறும் நாள் பற்றி இரு தரப்பினரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் அது இன்றிலிருந்து ‎‎மூன்று மாதங்களுக்கு மேற்படாதிருக்கவேண்டும்.‎

மேற்படி விவாதத்திற்கு தாங்கள் தயார் என்றால் தங்களது ஒப்புதலை எனது மின் அஞ்சல் முகவரியிற்கு ‎அனுப்பி வைத்தால் காலதாமதத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம் அவ்வாறு கால தாமதம் தவிர்க்கப்படுவதனால் ‎தாங்களும் தாங்களை நம்பிய பாமர மக்களும் தொடாந்தும் வழிகேட்டில் செல்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளலாம் என ‎எண்ணுகின்றேன்.

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!‎‎

இப்படிக்கு உண்மையுள்ள‎
மௌலவி முனாப் நுபார்தீன்-ஜே.பி

தொடர்புகளுக்கு:-

சவுதி அரேபியா:
மொபைல்: 00966-56-1568056‎

நிரந்தரம்:-
0094252247374‎

மின் அஞ்சல்: nufardeenjp@yahoo.com

கோப்புகள் இணைப்பு:
ததஜ-வினருக்குப் பகிரங்க விவாத அழைப்பு
விவாதத்தின் விதிகள்

Monday, June 05, 2006


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் அருளால்...‎அல்கஸீம் தலைநகர் புரைதாவில் ‎தலைமை ஜாலியாத் தமிழ் பிரிவு நடத்தும் ஏகத்துவ எழுச்சி மாநாடு தமிழ் தவ்ஹீத் இஜ்திமா date : 15.06.2006(19.05.1427) வியாழக்கிழமை‎ நேரம் : இரவு pm 9.30 மணி முதல்‎‎ இடம் : புரைதா தலைமை ஜாலியாத் மாநாட்டு மண்டபம்‎ தலைமை:-மௌலவி முனாப் நுபார்தீன்-jp (சமாதான நீதவான் இலங்கை) அழைப்பாளர் புரைதா தலைமை ஜாலியாத்‎ tp.3248980, 3243100-116,0561568056, 0557941134,3242827, 0507425102,‎தொடர்புகளுக்கு:-புரைதா. தொ.பே. tp 3824954,0502369507,0567635171, 3239917 ,3692425, 0500914823 ‎உனைசா:-tp 3644506, 0500421063, 0508876114, 0500346850 ரியாத் அல்கப்ரா:-tp 0507942247, 0568467480 ‎மித்னப்:-tp 0508196642 , 3422222- உங்கள் அணைவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்‎ அழைப்பின் மகிழ்வில் தலைமை தமிழ் தஃவா கமிட்டி அல்கஸீம் மாகாணம்‎الاعلان عن رحلة العمرة ‏

புரைதா தலைமை ஜாலியாத் தமிழ் சகோதரர்களுக்கான ‎புனித உம்ராப்பயணம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது என்பதனை ‎அறியத்தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.
எனவே புனித ‎உம்ரா கடமையினை நிறைவேற்றவுள்ள சகோதரர்கள் தங்கள் பெயர்களை காலதாமதமின்றி பதிவு செய்து கொள்ளுமாறு ‎அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.
‎date:-25.05.1427(21.06.2006) புதன்கிழமை
கட்டணம்:-
SR.70‎‏/= ‎ரியால்மட்டுமே‎
தொடர்புகளுக்கு:‎
சகோசேக்மீரான்; -t.p. 0500914823
சகோ.செய்யது யூசுப் -t.p. 3260982, 0502905934‎
சகோ.அப்துல் காதர் - t.p. 3251243, 0502401300‎
சகோ.கரீம் - t.p. 3254792, 0502681891‎
சகோ.சலீம் - t.p. 0567635171,0500918564‎
சகோ.பிலால் அஹ்மது - t.p. 3236589‎
மேலதிக விபரங்களுக்கு:-
மௌலவி,முனாப் நுபார்தீன்-jp:-t.p.3243100 3248980 ext. 116
cell: 0561568056,0557941134‎
Email:nufardeenjp@yahoo.com

Saturday, June 03, 2006


அல்லாஹ்வின் அருளால்...‎தற்பொழுது சந்தையில்விற்பனையாகின்றது
உங்கள் தமிழ் மொழியில்
சுணாமி
CD

கடந்த
2004.12.26ம் தேதி‎ இந்தொனேசியா முதல் இலங்கை வரை
இலச்சக்கணக்கான மனித ‎உயிர்களையும், உடமைகளையும்
பலி கொண்ட ‎சுணாமி யின்
கோரக்காட்ச்சி
VCD

கிடைக்கும் இடங்கள்
1-தலைமை ஜாலியாத் புத்தக நிலையம்
குபைப் ஜும்ஆப்பள்ளி அருகே


2-புரைதா தமுமுக அலுவலகம் கேரலா
மார்க்கட்குபைப்-புரைதா
3-எம். ஏ. இஸ்ஸதீன் றியாத்‎


இணைய தளம்:-www.munaff.blogspot.com

மின் அஞ்சல்:- nufardeenjp@yahoo.com